வெஜ் பப்ஸ் (Veg puffs recipe in tamil)
*bakery style
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் உருளைக்கிழங்கை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
- 2
2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு தக்காளி நறுக்கிய சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள். இப்போது அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, சீரகத்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
- 3
இப்போது அதில் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து 1 நிமிடம் வதக்கிக் கொள்ளுங்கள்m இப்போது அதில் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி நீர் வற்றும் வரை காய்கறிகளை வேக வைத்து கொள்ளுங்கள். நீர் வற்றிய பிறகு சில நொடிகள் வதக்கி விட்டு அதில் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சில நொடிகளில் மறுபடியும் வதக்கி கட்ட அதை முழுமையாக ஆறவிடுங்கள்.
- 4
மைதா மாவில் உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பத்து நிமிடம் பிசைந்த பிறகு மாவை கிளிங் wrap இல் ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து விடுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு மாவை பிரிட்ஜில் இருந்து எடுத்து சதுர வடிவத்தில் ரோல் செய்யுங்கள். இப்போது அதை மடித்து மறுபடியும் ரோல் செய்யுங்கள். இதை 7-8 முறை ரிப்பீட் செயின்கள். இப்போது மாவை கிளிங் wrap செய்து ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து விடுங்கள் மாவு தயார
- 5
மாவை இரண்டு பங்குகளாக நடுவில் வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பங்கு மாவை மறுபடியும் சதுர வடிவத்தில் ரோல் செய்து கொள்ளுங்கள் இப்போது அதை நாலு சதுர பங்குகளாக பிரித்து கொள்ளுங்கள். ஒவ்வொன்றிலும் வெஜ் மசாலா வைத்து அதை மூடிவிடுங்கள். மசாலா வெளியிலே தெரிந்தாலும் பரவாயில்லை. இப்போது அதில் மேல் பிரஷ் பயன்படுத்தி முட்டை அல்லது பாலை தடவி விடுங்கள். இப்போது அதை 25-30 நிமிடம் அவனில் 250° C இல் பேக் செய்து கொள்ளுங்கள். இன்னொரு பங்கு இருக்கும் இதே ஸ்டெப் ரிப்பீட் செய்யுங்கள். வெஜ் பப்ஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்