இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)

அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு சிறுதீயில் வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை ஆகிய எல்லாவற்றையும் நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பிறகு கடாயில் கால் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், புளியை போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
ஆறியவுடன் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள்,பூண்டு பொடி, பொட்டுக்கடலை பொடி எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இன்ஸ்டன்ட் சாம்பார் மிக்ஸ் தயார்
- 5
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு நசுக்கிய பூண்டு கருவேப்பிலை பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பிறகு ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்
- 6
இன்ஸ்டன்ட் சாம்பார் பொடி மூன்று ஸ்பூன் எடுத்து தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து அதை தாளிப்பில் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் அடிப்பிடிக்காமல் 3 நிமிடம் கிளறினால் நமது இன்ஸ்டன்ஸ் சாம்பார் தயார். சிறிதளவு தேங்காய்த்துருவல், மல்லி இலை தூவி பரிமாறலாம்.🤤🤤😋
Keywords
Similar Recipes
More Recipes
- * பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
- திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
- தயிர் ஐஸ்கிரீம்(curd icecream recipe in tamil)
- செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
- கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)





















கமெண்ட்