ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை(prawn semi fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்....பிறகு மண் சட்டியில் நல்லெண்ணை சேர்ந்து காய்ந்ததும் கருவேப்பிலையை தாளித்து கொள்ளவும்...
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்ச வாசனை போக வதக்கவும்... பின்னர் உப்பு,மல்லித்தூள்,
மிளகாய்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்கு பச்ச வாசனை போக வதக்கவும்... பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்... - 3
பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்... பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்... தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்...
- 4
இறால் வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்...சூடான சுவையான ஸ்பைசி ப்ரான் செமி ப்ரை தயார்....
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)