வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)

வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அனைத்து காய்கறியையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் 50 மில்லி ரி பைண்ட் ஆயில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து லேசாக வறுககவும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
ஒரு நிமிடம் வதங்கிய பின் நறுக்கிய வெங்காயம் தக்காளி மல்லி இ புதினா இலைகள் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் தக்காளி நன்கு மசிந்ததும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து பிரியாணி மசாலா தேவைப்படும் அளவுக்கு சேர்க்கவும் இப்பொழுது அரிசியை விட இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
- 5
தண்ணீர் கலந்து ஊற்றிய உடன் அரை எலுமிச்சம் பழம் சாறு எடுத்து சேர்த்து உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும் இப்பொழுது நுரை கட்டுவதற்காக ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும்
- 6
ஐந்து நிமிடங்களில் நுரை கட்டவும் அரிசியை கழுவிஅதில் சேர்க்கவும் அரிசியை சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடி போட்டு இரண்டு விசில் விடவும்
- 7
இரண்டு விசில் வைத்து அடுப்பை அணைத்ததும்பிரஷர் நன்கு குறைந்ததும் குக்கரை திறந்து மேலே நெய் சேர்த்து நன்கு கிளறி அப்படியே பிரியாணியை சமப்படுத்தி ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்
- 8
ஐந்து நிமிடங்கள் கழித்து நன்கு கிளறிவிட்டு தயிர் பச்சடியுடன் பரிமாறவும் அருமையான மிகவும் சுலபமான வெஜிடபிள் பிரியாணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes























கமெண்ட்