Banyard (kuthiraivali tomoto bhath recipe in tamil)

#ku challenge alert week 4
சிறுதானியம் உணவு குதிரைவாலி தக்காளி சாதம்.
Banyard (kuthiraivali tomoto bhath recipe in tamil)
#ku challenge alert week 4
சிறுதானியம் உணவு குதிரைவாலி தக்காளி சாதம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் அறிந்து கொள்ளவும். அதேபோல தக்காளியும் நீல வாக்கி அறிந்து கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி கொள்ளவும். மசாலா சாமான் எடுத்து வைத்துக் கொள்ளவும்m கொத்தமல்லி கருவேப்பிலை நறுக்கியதை எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு அதில் பிரிஞ்சி இலை சோம்பு பட்டை ஒரு ஸ்டாரின் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
- 2
இது லேசாக வாசம் வந்தவுடன் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.இவை சில வினாடிகள் வதங்கிய பிறகு அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும் இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் தேவையான உப்பு சேர்த்துக் கொண்டு கலந்து விடவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு அதில் 15 நிமிடம் ஊறவைத்த குதிரைவாலி தண்ணீர் வடித்து சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடவும். வெயிட் போட்டு மூன்று சவுண்ட் வந்தவுடன் இரண்டு அல்லது மூன்று நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து கருவேப்பிலை கொத்தமல்லி மற்றும் தேவையென்றால் நெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு தயிர் பச்சடியுடன் பரிமாறவும். சரியான ஆரோக்கியமான குதிரைவாலி தக்காளி சாதம் தயார்.
- 4
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் ஆரோக்கியம் நிறைந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதாவது ஒன்று இதுபோன்று சிறு தானிய வகையில் செய்து சாப்பிடலாம் அரிசி அதிகம் சேர்க்காமல் இருக்க முடியும்.
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (2)