பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)

பனானா புட்டிங்(banana pudding recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பேனில் பாலுடன் மூன்று மேஜைக் கரண்டி சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறிக் கொண்டே காய வைக்கவும் பாதி அளவு குறைய வேண்டும் 15 நிமிடங்கள் எடுக்கலாம். அதன்பின் பால் கலவையை நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறும் நேரத்தில் கொஞ்சம் கிளற வேண்டும் பாலேடு சேராமல் இருப்பதற்காக.
- 2
மற்றொரு பானில் சர்க்கரையுடன் தண்ணீரை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து கரைய வைக்கவும். கொஞ்சம் நேரத்தில் ஓரங்களில் பொன்னிறமாக மாறி சர்க்கரை கேரமலைஸாக ஆரம்பிக்கும். சர்க்கரை காரமல் தயாரானவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விட வேண்டும் இல்லை என்றால் கருகிவிடும்.
- 3
ஒரு ஆறு இன்ச் கேக் டின்னில் தயார் செய்த கேரமலை ஊற்றவும். இப்பொழுது மிக்ஸியில் ஒரு பெரிய வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதோடு முட்டை வெண்ணிலா எசன்ஸ் ஆற வைத்த பால் கலவை இவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்.
- 4
இதனை வடிகட்டி கேக் டின்னில் சேர்த்துக் கொள்ளவும். முழுவதுமாக ஊற்றிய பின் மேல் பக்கம் நுரை சேர்ந்திருந்தால் அதனை எடுத்து விட வேண்டும். அலுமினியம் பாயில் கவரை உபயோகித்து மூடவும்.
- 5
ஒரு கடாயில் அடியில் ஒரு டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மேல் கால் பங்கு அளவில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் இந்த பாத்திரத்தை வைத்து மூடி போட்டு சிறு தீயில் 35 நிமிடங்கள் ஸ்டீம் செய்யவும். அதன் பின் நன்றாக ஆறவைத்து அதற்குப் பிறகு ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைக்கவும்.
- 6
இப்பொழுது ஓரங்களை கத்தியால் கீறி விட்டு அன் மோல்ட் செய்யவும். விருப்பப்பட்ட நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்