ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)

ரோட் சைடு ஸ்பைசி காளான் (Road side spicy kaalaan recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் மற்றும் காளான் இரண்டையும் பொடியாக நறுக்கி தண்ணீரில் அலசி வடிக்கட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் 1கப் மைதா மாவு, 1/4 கப் சோள மாவு, 1 ஸ்பூன் மிளகாய் தூள், 1ஸ்பூன் கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும்.
- 2
பின்னர் சிறு சிறு உருண்டையாக எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் அரைத்து எடுத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், 1/2ஸ்பூன் கரம் மசாலா, 1ஸ்பூன் மல்லி தூள் 2ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் மசாலாவிற்கு தேவையான உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் 1ஸ்பூன் சோள மாவை 1/4டம்ளர் தண்ணீரில் கரைத்து மசாலாவில் சேர்க்கவும். பின்னர் பொரித்து எடுத்த காளான் வறுவலை சேர்த்து பிரட்டவும். 5நிமிடம் வேக விடவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பச்சை வெங்காயம் தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
- மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
- ஸ்பைசி காடை பிரியாணி (Spicy kaadai biryani recipe in tamil)
- Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
- வெள்ளரிக்காய் மோர் குழம்பு (vellarikkaai morkulambu recipe in tamil)












கமெண்ட்