ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு | பச்சை பயறு தோசை (Pesarettu recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு | பச்சை பயறு தோசை (Pesarettu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறு மற்றும் இட்லி அரிசியை நன்றாக கழுவி 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.பச்சை பயறு நன்றாக ஊறினால்தான் அரைக்க சுலபமாக இருக்கும்
- 2
பின் அரைக்கும் ஜாடியில் பச்சை பயறு, அரிசியுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த மாவை பாத்திரத்தில் மாற்றி உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
தோசை கல்லை சூடு செய்து மெல்லிய தோசையாக ஊற்றவும்
- 5
30 நொடிகள் ஆனதும் சிறிது சீரகம், நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லியை மேலே தூவவும்
- 6
நன்றாக வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்
- 7
ஆந்திர ஸ்பெஷல் பெசரட்டு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13607792




















கமெண்ட்