ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)

#ap
ஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன்.
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#ap
ஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் கழுவி தேவையான நீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.வெங்காயம், முருங்கைக்காய், தக்காளி,கேரட், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தேவையான பொருட்களில் கூறியபடி அரிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தேவையான பொருட்களில் கூறியுள்ள தாளிப்பு சாமான்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான வாணலியில்ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, சூடு ஏறியபிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு அதில் பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
வெங்காயம் சிறிது வதங்கிய பின் அதில் காய்கறிகள் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்கு பிரட்டி விட்டு அதில் ஒன்றரை ஸ்பூன் வரமிளகாய் தூள், ஒன்றரை ஸ்பூன் கொத்தமல்லித்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வாசம் வர வதக்கவும்.
- 4
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காயை நன்கு கொதிக்கவிடவும்.கொஞ்சம் காய் வெந்த பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும். பதினைந்து நிமிடம் வரை நன்கு காயை வேக விடவும். காய் வெந்து சாம்பார் வாசம் நன்றாக வரும்.அப்போது கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து கலந்து விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.
- 5
புளியுடன் சேர்த்து சாம்பார் கொதித்த உடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும்.அடுப்பை நிறுத்திவிட்டு அரிந்து வைத்த கொத்தமல்லி தழை குழம்பில் சேர்க்கவும்.
- 6
சுவையான ஆந்திரா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் ரெடி. இட்லி, தோசை, பொங்கல், வடை, உப்புமா போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.நம்மூரில் டிபன் சாம்பார் செய்ய தேங்காய், கொத்தமல்லி மசாலா பொருட்கள் அரைத்துவிட்டு செய்வோம். ஆனால் ஆந்திர சாம்பாரில் அப்படி செய்வது இல்லையாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steamஇது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன். Meena Ramesh -
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)
#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லிIlavarasi
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
இந்த சாம்பார் பொடி,சாம்பாருக்கு சுவையும்,கெட்டித்தன்மையும் கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
-
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Keralaசத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி) Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
வாழை பூ சாம்பார்(vaalaipoo sambar recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுக்கு மிகவும் நல்லது வயிற்றுப்புண் இருந்தால் வாழைப்பூ சாப்பிட்டால் அதுவும் பாசிப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டோம் என்றால் வயிறு புண் ஆறிவிடும். வாழை மரத்தில், காய்க்கும் ,காய்,கனி ,தண்டுகள் வாழை இலை, வாழை பூ அனைத்தும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வகை உணவாகும். வாரம் ஒருமுறை வாழைத்தண்டு அல்லது வாழை பூ வாழை காய் இவற்றை செய்து சாப்பிடவும்.வாழை காய் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. எது செய்தாலும் வயதானவர்கள் என்றால் எண்ணெய் காரம் புளிப்பு உப்பு குறைவாக சேர்த்து செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சிறிய வயது இளம் வயது இவர்களுக்கு எண்ணெய் சேர்த்து செய்து கொடுக்கலாம் அவர்களுக்கு சுவை தேவைப்படும். என்னுடைய தாழ்மையான கருத்து இது. Meena Ramesh -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
பாலாக்கீரை பாசிப்பருப்பு பால் கூட்டு🥗🍶
#nutrient1 #bookபாலாகீரையில் பல நன்மைகள் உண்டு. புரத சத்து அதிகம் நிறைந்தது.ரத்தம் விருத்தியடையும். இந்தக் கீரையுடன் வேப்பிலை, மஞ்சள் தூள், ஓமம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் பெருவயிறு குறையும். போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்கு நல்லது.குழந்தை பெற்றவர்கள் உட்கொண்டால் பால் அதிகம் சுரக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். மெக்னீசியம், ஜிங்க், காப்பர், விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்கும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் மாரடைப்பு ரத்த குழாய் அடைப்பு வராமல் தடுக்கும். சிறு பருப்புடன் கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.பாலில் கால்சியம் சத்து( 12./.)அதிகம் உள்ளது. புரோட்டின் சத்தும் 3.4 கிராம் உள்ளது. விட்டமின் பி, விட்டமின் b 16, மெக்னீசியம் பொட்டாசியம், சோடியம் ,காலன்மின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பல சத்துக்கள் நிறைந்த பாலா கீரை, புரதம் நிறைந்த பாசிப்பருப்பு மற்றும் கால்சியம் நிறைந்த பால் சேர்த்து செய்த கூட்டு இது. உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது Meena Ramesh -
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar
More Recipes
கமெண்ட் (2)