குஸ்கா (Kushka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், கிராம், சோம்பு சேர்த்து பொரிக்கவும்.
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேகவிடவும். இடையே, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 2
பின்னர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பிறகு, தக்காளி சேர்த்து கிளறி நன்றாக வேகவிடவும். தக்காளி வெந்ததும் தயிர் சேர்த்து கிளறவும் - 3
தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசி, மூன்றரை தம்ளர் தண்ணீர் சேர்த்து, கூடவே, புதினா இலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மிதமான தீயில் ஒரு விசில் விட்டு வேகவிட்டு இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13768685




கமெண்ட் (2)