கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)

கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் கொள்ளு சேர்த்து லேசாக வறுத்த பின்னர் 1டம்ளர் தண்ணீர் சேர்த்து 6(அ)7 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 2
பின்னர் மிக்ஸியில் தக்காளி, வரமிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 3
பின்னர் வெந்த கொள்ளை வடிகட்டி தண்ணீரை தனியாக எடுத்து கொள்ளவும்
- 4
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து அரைத்த விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் கரைத்த புளி தண்ணீர் ஊற்றி கலந்து லேசாக கொதித்தவுடன் கொள்ளு வேக வைத்து எடுத்த தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் கொள்ளு ரசம் தயார்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய் தாளித்து வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி வெந்த கொள்ளை சேர்த்து கிளறி கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கினால் சுண்டல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட் (3)