காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Week13
#Mushroom
கறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக.

காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)

#GA4
#Week13
#Mushroom
கறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் காளான்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  5. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 ஸ்பூன் கரம் மசாலா
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. 1பட்டை,கிராம்பு,ஏலக்காய்
  11. கொத்தமல்லி தழை,கருவேப்பிலை சிறிதளவு
  12. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  13. தேங்காய் சிறிதளவு
  14. 6 முந்திரிபருப்பு
  15. 1/2 ஸ்பூன் கசகசா
  16. 1/2 ஸ்பூன் சீரகம்
  17. 1/2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பெரிய வெங்காயம்,தக்காளி பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம் சேர்த்து வதக்கவும்.பின்பு, நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசணை போகும் வரை வதக்கவும்.நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    மஞ்சள் தூள்,காஷ்மீர் மிளகாய் தூள்,தனி மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப சேர்க்கவும்.

  4. 4

    அதனுடன்,மல்லித்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.பின்பு, நறுக்கி வைத்த காளானை மசாலாவுடன் சேர்க்கவும்.

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து,கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மசால் வாடை போகும் வரை வதக்கவும்.

  6. 6

    மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தேங்காய் சேர்த்து,முந்திரி பருப்பு,கசகசா சிறிதளவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காளானுடன் தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  7. 7

    உப்பு பார்த்துக் கொள்ளவும்.சுவையான காளான் கிரேவி தயார்.தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சைடு ஃடிஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

கமெண்ட் (2)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
உங்கள் ரெசிப்பீஸ் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது காளான் கிரேவி எக்ஸலண்ட்.

Similar Recipes