வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)

வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி பண்ணுவதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும்
- 3
அதை அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்து கொள்ளவும் பிறகு தக்காளி சேர்த்து நன்கு மசிக்கவும். பின் பட்டாணி கேரட் சோயா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
அதில் மூன்று ஸ்பூன் பிரியாணி மசாலா சேர்த்துக் கொள்ளவும் பிறகு வலி புதினா ஆகியவற்றை கிளறிவிட்டு கால் மணி நேரம் ஊற வைத்த அரிசியை அதோடு சேர்த்து கலந்து விடவும்
- 5
5 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பின் குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விட்டு எடுக்கவும். 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட்