சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் எண்ணெய் நெய் சேர்த்து காய்ந்தவுடன் பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சோயா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின் நறுக்கி வைத்த காய்கறிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கிய பின் புதினா தக்காளி தயிர் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
பின்பு 3 கப் அரிசிக்கு 4 1/2 கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசியை அதில் சேர்க்கவும்.
- 6
இப்போது தண்ணீரும் அரிசியும் சம அளவு வந்தவுடன் அதில் கேசரி கலர் சிறிதளவு சேர்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு எடுத்து கொண்டால் வெஜ் பிரியாணி தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14742398
















கமெண்ட்