புதினா எலுமிச்சை ஜூஸ்

Riswana Fazith @cook_28228533
புதினா எலுமிச்சை ஜூஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலை சேர்த்துக் கொள்ளவும்
- 2
2 எலுமிச்சை பழம் கட் பண்ண 4 துண்டு கிடைக்கும். அதில் 3 துண்டு மட்டும் மிக்சி ஜாரில் பிழிந்து எடுக்கவும்.
- 3
அதில் 1 துண்டு மட்டும் கொட்டை எடுத்து அதை அப்படியே சேர்த்து கொள்ளவும்
- 4
கொஞ்சம் ஐஸ் கட்டிகள் அப்படியே சீனி சேர்த்து கொள்ளவும்
- 5
சீனீ வேண்டாம் என நினைத்தால் உப்பு கூட சேர்த்து கொள்ளலாம். ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
- 6
நல்ல நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த பிறகு வடிகட்டி வைத்து வடித்து கொள்ளவும்
- 7
பிறகு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்.
- 8
கொஞ்சம் அலங்கரிக்க 1 துண்டு எலுமிச்சை பழம் 2 புதினா இலை
- 9
வெயிலுக்கு ஏற்ற புதினா எலுமிச்சை ஜூஸ் இதை குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981787



















கமெண்ட்