தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி
செய்து பாருங்கள் மக்களே
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் கீற்றை மிக்ஸியில் சேர்த்து 1.5கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்
- 2
குக்கரில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேங்காய் பால் ஊற்றி உப்பு சேர்த்து 1 கொதி வந்ததும் அரிசி, புதினா இலை சேர்த்து கிளறி 2 விசில் வந்ததும் இறக்கவும்
- 4
முட்டையை வேக வைத்து தோல் நீக்கி தனியாக எடுத்து கொண்டு பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் (கிரேவி பதம் வரும்வரை)
- 7
பின்னர் அதில் வெந்த முட்டைகளை சேர்த்து 1கொதி வந்தவுடன் தேங்காய் பால் சாதத்துடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes

























கமெண்ட்