சென்னா மசாலா(Channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு அரைத்த தக்காளி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 2
வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு வேக வைத்த வெள்ளை சுண்டலை இதில் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடம் வைக்கவும்
- 3
மசாலாவுடன் நன்றாக கலந்த சுண்டலை மெதுவாக சிறிது மசித்து விடவும் பிறகு இதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு இதனை குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 4
10 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை இதனுடன் தூவி நன்றாக கலந்து பரிமாறவும் சுவையான சென்னா மசாலா தயார்
குறிப்பு :
வறுத்து அரைக்கும் பொழுது காய்ந்த மாங்காய் தூள் இல்லை எனில் இறுதியாக அரை எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்...
Keywords
Similar Recipes
More Recipes
















கமெண்ட் (5)