கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)

#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...
ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪

சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு வேக வைக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து பருப்பை மைய வேக வைத்துக் கொள்ளவும்... கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். மற்ற காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எனக்கு 6 அக்காய் தான் கிடைச்சது.. அதான் 7 வதா உருளைக்கிழங்கு சேர்த்துகிட்டேன்🙈🙈... அதுவும் சுவையை கூட்டி தான் கொடுக்கும்... மாங்காய் கிடைச்சா சிறப்பு...
- 2
மண் சட்டி அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு உளுந்து, கருவேப்பிலை போட்டு பொறிஞ்சதும் சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பிறகு காய்கறிகளை போட்டு கிளறவும்.
- 3
2 நிமிடம் வதங்கியதும், சாம்பார் தூள், உப்பு, மசித்த பருப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்... சுண்டியவுடன் இறக்கவும்...
புளி தேவையில்லை...
- 4
அபாரமான சுவையில் கதம்ப சாம்பார் தயார்... கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க..
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமா இருங்க....
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்