ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)

#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம்.

சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியில் துவரம்பருப்பு போட்டு மிதமான சூட்டில் சிவக்க வறுக்கவும். அதில் சீரகம், மிளகு, கொத்தமல்லி, 1 வரமிளகாய், வெந்தயம் சேர்த்து வறுத்து ஆறின பின் நைசாக பொடி செய்து வைக்கவும்.
- 2
இதில் பூண்டு 4பல்,கொத்தமல்லித்தழை, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துப் புளிக்கரைசலுடன் சேர்த்து உப்பு, சர்க்கரை சேர்த்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி புளிக்கரைசல் ஊற்றி மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். கமகம மணத்துடன் பருப்பு ரசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)