முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)

#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
மண்சட்டி அடுப்புல வச்சு தாளிக்க எண்ணெய் ஊத்திக்கனும்... காஞ்சதும் சோம்பு அப்பறம் வாசனை பொருள் போட்டு தாளிக்கணும்... சின்ன வெங்காயம், பூண்டு தட்டி நைச்சு சேத்துக்கணும்... வதங்கினதும் பொடியாக நறுக்கின பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கனும்
- 2
மிளகாய் பொடி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கனும்... ஒரு சட்டில தக்காளி போட்டு கையில பிசைஞ்சு, அதையும் போட்டு வதக்கனும்
- 3
குழம்பு பொடி, தேவையான அளவு தண்ணீர், அப்பறம் கரம் மசாலா பொடி போட்டு கொதிக்க விடனும்
- 4
கொதிச்சு கொஞ்சம் சுண்டின பிறகு தேங்காயும், முந்திரியும் சேர்த்து அரைச்சு குழம்புல ஊத்தி ஒரு கொதி வந்த உடனே, முட்டைய உடைச்சு பொத்துனாப்ல குழம்புல தள்ளி தள்ளி ஊத்திக்கணும்..
- 5
ஒரு பத்தி நிமிசம் கிளறாம விட்டுட்டு அப்பறம் மெல்லமா கிளறி பறிமாறினா உடைச்சு ஊத்தின முட்டை குழம்பு தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமா இருங்க.....
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (2)