சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)

#made3 சிறுதானியங்கள பொங்கல், சோறு, கூழ், கஞ்சி, மாதிரி செஞ்சு சாப்பிடுறது ரொம்ப நல்லதுங்க.... இதுவும் மண்சட்டியிலயே வெறும் 20 நிமிசத்துல செஞ்சுடலாம்....
சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)
#made3 சிறுதானியங்கள பொங்கல், சோறு, கூழ், கஞ்சி, மாதிரி செஞ்சு சாப்பிடுறது ரொம்ப நல்லதுங்க.... இதுவும் மண்சட்டியிலயே வெறும் 20 நிமிசத்துல செஞ்சுடலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
திணை, குதிரைவாலி, வரகு, சாமை இதெல்லாம் 1/4 கிலோ வாங்கி ஒண்ணா கலந்து ஒரு டப்பால போட்டு வச்சுடுவேங்க... அதுல இருந்து தான் ஒரு டம்ளர் எடுத்துக்கிறோம்... இரவே அத கழுவி ஊற வச்சுடுங்க... சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசிகள எவ்வளவுக்கு எவ்வளவு ஊற வைக்குறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு செரிமானத்தை எளிமையாக்கும்.
- 2
காலையில, பாசிப்பருப்ப கழுவி 10 நிமிசம் ஊற வச்சுக்கோங்க.. மண்சட்டி அடுப்புல வச்சு 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொதிச்ச உடனே சிறுதானியத்தையும், பாசிப்பருப்பையும் போட்டு மூடி வச்சுடுங்க..
- 3
இன்னொரு அடுப்புல தாளிப்பு கரண்டிய வச்சு நெய் ஊற்றி, முந்திரி போட்டு வறுத்து எடுத்து வச்சுக்கோங்க
- 4
பொங்கல் வெந்த உடனே, முந்திரி வறுத்த நெய்ல மிளகு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளிச்சு பொங்கல்ல போட்டு கிளறி சாம்பார் சட்னி வடையோட பறிமாற வேண்டியதுதான்🤤
ஆனந்தமா சாப்பிடுங்க...
ஆரோக்கியமா இருங்க....
Keywords
Similar Recipes
More Recipes
- காலிஃபிளவர் பட்டாணி கலவை சாதம்(peas cauliflower rice recipe in tamil)
- மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)
- குதிரைவாலி குஸ்கா(kuthiraivali kushka recipe in tamil)
- இனிப்பு பணியாரம்(sweet paniyaram recipe in tamil)
- அவல் ஊத்தப்பம்(aval uthappam recipe in tamil)



கமெண்ட்