புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
புடலங்காய் தோல் சீவி,கழுவி,உள்ளே உள்ள விதைகளை நீக்கி,தேவையான பக்குவகுத்தில் வெட்டிக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில்,தேங்காய்,சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு, வரமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
வதங்கியதும்,நறுக்கிய புடலங்காய் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி விடவும்.
- 4
பின்,100ml அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.அடிக்கடி கிளறவும்.
- 5
10 நிமிடங்களில் வெந்துவிடும்.வெந்து தண்ணீர் வற்றியதும், அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்.
- 6
2நிமிடங்கள் விட்டு உப்பு சரி பார்த்து இறக்கவும்.
- 7
அவ்வளவுதான்.சுவையான புடலங்காய் பொரியல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16094197












கமெண்ட் (2)