பாலக் தால் கறி(palak dal curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக கட் செய்து கொள்ள வேண்டும். துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து கீரை மற்றும் பருப்பை குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
விசில் போனதும் தனியாக வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு சிறிய அளவில் கட் செய்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு மசித்து வந்த பிறகு வேக வைத்த பருப்பு, கீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கொதிக்க விட்டு கடைசியாக வெண்ணெய் விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான சத்தான பாலக் தால் கறி தயார். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16494915
















கமெண்ட்