பாஸ்மதி மட்டன் பிரியாணி(basmati mutton biryani recipe in tamil)

பாஸ்மதி மட்டன் பிரியாணி(basmati mutton biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் மட்டன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் மற்றும் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து 100 ml நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். பிறகு பாஸ்மதி அரிசியை ஒருமுறை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்
- 2
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு லவங்கம் சேர்த்து அதனுடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 3
வதங்கிய பிறகு கொத்தமல்லி புதினா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கிய பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும் இப்போது தயிறு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
இப்போது 800 ml தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 6
ஊறிய அரிசியை மீண்டும் ஒருமுறை கழுவி தண்ணீரை வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து தட்டு போட்டு 15 நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்
- 7
சுவையான மட்டன் பாஸ்மதி பிரியாணி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்