காளான் பீஸ் கிரேவி(mushroom peas gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை நன்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளவும். திசை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு கருவேப்பிலை வரமிளகாய் தாளித்துக் கொள்ளவும். பின்பு அரைத்து வைத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும்
- 3
நன்றாக வதங்கிய பின் அரைத்து வைத்த தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்
- 4
தக்காளி நன்கு வதங்கி என்னை பிரிந்து வந்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அதன் பின் நறுக்கி வைத்துள்ள காளான் மற்றும் peas ஐ சேர்த்து வேக விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
நன்றாக வெந்தவுடன் தேங்காயுடன் முந்திரி கசகசா சோம்பு சேர்த்து அரைத்த விழுதை இதனுடன் சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி விடவும். நன்கு கொதித்து கிரேவி சுண்டியவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். காளான் கிரேவி தயார் சப்பாத்தியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)