கடலை கறி(kadalai curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலையை 6-8 மணி நேரம் ஊற வைத்து 4-5 விசில் விட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
துருவிய தேங்காயை மிதமான சூட்டில் கடாயில் வறுக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா மல்லி தூள் சேர்த்து இறக்கி ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
கடாயில் ண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் ஏலக்காய் கிராம்பு பட்டை சேர்த்து பொறிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தேங்காய் மற்றும் வேகவைத்த கடலை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 -15 நிமிடங்கள் கழித்து கறிவேப்பிலை இலை தூவி இறக்கவும்.
- 7
ஆப்பம் கடலை கறி சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ஃபேஸ்
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்