மட்டன் பால்ஸ்(mutton balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பொட்டுக்கடலை நன்றாக பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, தேங்காய், பட்டை, கிராம்பு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து தனியே எடுத்து கொள்ளவும். பின் அதே ஜாரில் கழுவி நீர் வடிகட்டிய மட்டன் துண்டுகளை அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
அரைத்த மட்டனுடன் அரைத்த மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு பொட்டுக்கடலை பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். உருண்டை பிடிக்கும் பதத்தில்.
- 4
இப்போது கலந்து வைத்துள்ள மட்டன் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். இந்த உருண்டைகளை முட்டை வெள்ளை கருவில் பிரட்டி பின் பிரட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
- 5
மிதமான தீயில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்