பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)

Sonika
Sonika @cook_19093916

#அசைவ உணவு

பக்கா சுக்கா (Pakka Sukka Recipe in Tamil)

#அசைவ உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1/2 கிலோகோழிக் கறி
  2. 50 -100 கிராம்சிக்கன் மசாலா - (காரத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்)
  3. 4 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  4. 1/2 கப்தயிர்
  5. 1/2 பழம்எலுமிச்சை
  6. 6 டேபிள் ஸ்பூன்கடலெண்ணெய்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மஞ்சள் பொடி கலந்து துண்டுகளாக நறுக்கிய கோழிக்கறியை நீரில் நன்றாக கழுவவேண்டும். பின்பு அகன்ற பாத்திரத்தில் துண்டுகளை எடுத்து அதனுடன் 100 கிராம் அளவு சிக்கன் 65 மசாலாவை சேர்க்க வேண்டும்.

  2. 2

    அதனுடன் 1/2 கப் தயிர், 4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை பழம் அளவு எலுமிச்சைச் சாற்றை சேர்க்க வேண்டும்.

  3. 3

    பின்னர் தேவைக்கேற்ற அளவு உப்பு சேர்த்து, மசாலா சமமாக பரவும் படி நன்றாக கலந்து விட வேண்டும்.
    பிறகு பாத்திரத்தை நன்கு மூடி 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

  4. 4

    ஒரு மணி நேரம் கழித்து, அடி கனமான அகன்ற பாத்திரத்தில் 6 டேபிள் ஸ்பூன் அளவு கடலை எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த கோழித்துண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

  5. 5

    கொதி வந்தவுடன் நன்கு கிளறி மூடி கொண்டு மூடி,
    5 நிமிடங்கள் முழு வெப்பத்திலும் 15 நிமிடங்கள் மிதமான வெப்பத்திலும் வேக விட வேண்டும்.
    அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விட வேண்டும்.

  6. 6

    ஊற்றிய எண்ணெய் துள்ளி குதித்து மேலே வந்தவுடன் ருசியான சிக்கன் சுக்கா பக்காவாகத் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sonika
Sonika @cook_19093916
அன்று

Similar Recipes