சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)

Fma Ash
Fma Ash @cook_20061862

இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.

#goldenapron3
#அவசர

சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)

இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.

#goldenapron3
#அவசர

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
03 நபர்கள்
  1. சிக்கனை பொரிக்க தேவையான பொருட்கள்:
  2. 250 கிராம் சிக்கனின் தொடைப்பகுதி
  3. 1/4 கப் சோளமா
  4. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  5. தேவையானளவு உப்பு
  6. 1 ஸ்பூன் எண்ணெய்
  7. சாஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்:
  8. 2 ஸ்பூன் சோயா சாஸ்
  9. 1 ஸ்பூன் தேன்
  10. 1/2 ஸ்பூன் சர்க்கரை
  11. 1/2 ஸ்பூன் வினாகிரி
  12. 1/2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட்
  13. 2 ஸ்பூன் தண்ணீர்
  14. சிறிதளவுவெங்காயத்தாள்
  15. 1 ஸ்பூன் எண்ணெய்
  16. 1டீஸ்பூன் மிளகுத்தூள்
  17. (வினாகிரி = வினிகர்)
  18. (மிளகுத்தூள் = பெப்பர்)
  19. (ஸ்பூன் = மேசைக்கரண்டி)
  20. (டீஸ்பூன் = தேக்கரண்டி)
  21. (1/4 கப் = 34 கிராம்)
  22. (250 கிராம் = கால் கிலோ)

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலாவது படி
    சிக்கனைப் பொரித்தல்.

    * சிக்கனை 3” அளவான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் சோளமா, மிளகுத்தூள், தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    * அதில் வெட்டி வைத்த சிக்கனை சேர்க்கவும்.

  2. 2

    சாஸ் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சிக்கனையும் சேர்க்கவும்.

    * சிக்கனை இரு பக்கங்களும் 3 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.

  3. 3

    இரண்டாவது படி
    சாஸ் தயாரித்தல்.

    * ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், தேன், சர்க்கரை, வினாகிரி (வினிகர்), இஞ்சி, பூண்டு பேஸ்ட், தண்ணீர், வெங்காயத்தாள் சேர்த்து சாஸை தயாரித்துக் கொள்ளவும்.

  4. 4

    மூன்றாவது படி
    தெரியாக்கி தயாரித்தல்.

    * சாஸ் பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, தயாரித்த சாஸையும் சேர்த்து கொதிக்க விடவும்.

    * பின்பு சிக்கனை சேர்த்து, சாஸ் பாதியாக குறையும் வரை வேக விடவும்.

    * இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து, கிளறவும்.

    * சிக்கன் தெரியாக்கி சுடச்சுட ரெடி.

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fma Ash
Fma Ash @cook_20061862
அன்று

Similar Recipes