காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#அவசர சமையல்

சில நேரம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து கம்மியாக நுரைக்கும் . அப்போது சிறிது அரிசி மாவை எடுத்து பூரண கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை இடியாப்பம் என்று எதையாவது நாம் செய்வோம். அதன்படி நான் இன்று எனக்கு பிடித்த காரக்கொழுக்கட்டை செய்துள்ளேன்.

காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)

#அவசர சமையல்

சில நேரம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து கம்மியாக நுரைக்கும் . அப்போது சிறிது அரிசி மாவை எடுத்து பூரண கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை இடியாப்பம் என்று எதையாவது நாம் செய்வோம். அதன்படி நான் இன்று எனக்கு பிடித்த காரக்கொழுக்கட்டை செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1கப் இட்லி புழுங்கல் அரிசி மாவு
  2. 1கப் தேங்காய்
  3. 1டீஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 1/2 ஸ்பூன் கடுகு
  6. 5காய்ந்த மிளகாய்
  7. கருவேப்பிலை
  8. பெருங்காயம்
  9. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எடுத்து வைத்த அரிசி மாவில் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் சேர்த்து நீர்த்தார் போர் கரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு,பெருங்காயம் என அனைத்தையும் தாளித்து கொள்ளவும்.

  3. 3

    கரைத்து வைத்த மாவை உடனே அந்த கடாயில் சேர்த்து முக்கால் பதம் வேகும் வரை கிண்டவும்.ஒட்டாமல் வரும் வரை கிண்டவும்.

  4. 4

    அதை எடுத்து ஆற வைத்து கையில் எண்ணெய் தடவி கொழுக்கட்டை பிடித்து இட்லி பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். குச்சியில் குத்தி ஒட்டாமல் வந்தால் சுவையான கார கொழுக்கட்டை ரெடி.

  5. 5

    தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes