சைனீஸ் ஹனி சிக்கன்

Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846

#goldenapron3
#அன்பானவ்ர்களுக்கான சமையல்.
என் வீட்டில் என் பெற்றோர்கள் மற்றும் என் அண்ணன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட விரும்புவார்கள் அதிலும் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம். அடிக்கடி ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதால் ஆரோக்கியம் மற்றும் செலவும் அதிகமாகும் ஆகையால் நான் ரெஸ்டாரென்ட் ஸ்டைலில் சில உணவுகள் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டு அவ்வப்பொழுது ஹோட்டலுக்கு செல்வதே தடுத்து நான் சமைத்து கொடுப்பேன்.அப்படி நான் சமைப்பதில் என் குடும்பத்தினர் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய சைனீஸ் ஹனிசிக்கனை அவர்களுக்காகவும் நம் குழுவிற்கும் சமைக்கிறேன். மேலும் கோல்டன் அப்புறம் 3இல் ஹனி என்று இன்கிரடின் உள்ளதால் சட்டென்று எனக்கு ஹனி சிக்கன் செய்ய தோன்றியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நான்கு பேருக்கு
  1. போன்லெஸ் சிக்கன் 400 கிராம்
  2. ஹனி நாலு ஸ்பூன்
  3. ஒயிட் பெப்பர் பவுடர் ஒரு ஸ்பூன்
  4. கார்ன்ஃப்ளார் இரண்டு ஸ்பூன்
  5. டொமேட்டோ சாஸ் 4 ஸ்பூன்
  6. துருவிய இஞ்சி ஒரு ஸ்பூன்
  7. ரெட் சிலி பவுடர் ஒரு ஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன்
  9. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. இரண்டு ஸ்பூன்
  11. கோரியண்டர் லீப் தேவையான அளவு
  12. காப்ஸிகம் பீஸ் சிறிது
  13. சோயா சாஸ் கால் ஸ்பூன்
  14. ஒயிட் எள்ளு இரண்டு ஸ்பூன்
  15. எண்ணெய் தேவையான அளவு
  16. நெய் 2 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சிக்கனுடன் அரை மிளகு தூள் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

  2. 2

    பிறகு கார்ன் ஃப்ளார் பவுடரை சிக்கனுடன் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு ஒரு பேனில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது ஒரு கடாயில் நெய் விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும். வற்றி வரும் பொழுது நறுக்கி வைத்த குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும் பின் அதனுடன் 2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    இப்பொழுது பொரித்து வைத்த சிக்கனை இந்த கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். எப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேன் மற்றும் 2 ஸ்பூன் டொமேட்டோ சாஸ் நன்கு கலந்து பொரித்து இருக்கும் சிக்கனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எள்ளை வறுத்து அதன் மேல் தூவி இறக்கவும்.

  5. 5

    எப்பொழுது வேறு பிளாட்டிற்கு மாற்றி மல்லி இலை மற்றும் எள் தூவி அலங்கரித்து பரிமாறவும். சுவையான சூப்பரான ஹாட் அண்ட் ஸ்வீட் ஹனி சிக்கன் ரெடி.. இந்த அற்புதமான ரெசிபியை என் அன்பான குடும்பத்திற்கு சமைத்துக் கொடுக்கின்றேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Drizzling Kavya
Drizzling Kavya @cook_19643846
அன்று

Similar Recipes