ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#arusuvai1

கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது.

ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

#arusuvai1

கேசரி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் சிறிய விசேஷம் முதல் பெரிய விசேஷம் வரை முதலில் இடம் பெயர்வது கேசரி தான். மிக மிக எளிமையான ரெசிபி ஆனாலும் அதனை பக்குவமாக செய்தால் தான் ருசி கிடைக்கும். ரவையை வறுக்கும் பக்குவத்தில் தான் கேசரி இருக்கிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1\2கப்ரவா
  2. 1கப்ஜீனி
  3. 11\2கப்தண்ணிர்
  4. 1\2கப்நெய்
  5. 10முந்திரிபருப்பு
  6. 10காய்ந்த திராட்சை
  7. 1சிட்டிகைகேசரி பவுடர்
  8. 1டேபிள்ஸ்பூன்பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ரவையை ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது வறுத்து வேறொரு தட்டில் ஆற விடவும்.

  2. 2

    அதே கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு காய்ந்த திராட்சையும், முந்திரியையும் வறுத்து அதனை தனியே வேறொரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு கையால் வறுத்து ஆற வைத்த ரவையை சிறிது சிறிதாக சேர்த்து மற்றொரு கையால் கிளறிக் கொண்டே இருக்கவும். கட்டி இல்லாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

  5. 5

    இரண்டு நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருக்கவும் இப்போது ரவை வெந்து இருக்கும்.. அதனுடன் சீனியை சேர்த்து கிளறி மிதமான தீயில் 2 நிமிடம் வைக்கவும்

  6. 6

    இப்போது ஜீனி நன்கு கரைந்து சுருண்டு வரும்போது சுற்றிலும் பாதி நெய் சேர்த்து கிளறவும்

  7. 7

    இப்போது பாலில் கேசரி கலர் பவுடரை கலந்து அதனை ஊற்றவும். மீண்டும் கிளறி மீதி உள்ள நெய்யை சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes