திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்...

திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)

#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கப் கடலை மாவு
  2. 1கப் சர்க்கரை
  3. 1/2கப் காய்ச்சி ஆறவைத்த பால்
  4. 2ஸ்பூன் சர்க்கரை
  5. 2ஸ்பூன் அரிசி மாவு
  6. 1ஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. 2ஸ்பூன் கற்கண்டு
  8. நெய்
  9. தேவையானஅளவு முந்திரி
  10. தேவையானஅளவு உலர்ந்த திராட்சை
  11. 1சிட்டிகை பச்சை கற்பூரம்
  12. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பால், 2ஸ்பூன் சர்க்கரை, மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    அதில் சிறிது சிறிதாக கடலை மாவை கொட்டி கலக்கவும்... மாவு கெட்டியானால் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூந்தி கரண்டியில் மாவை ஊற்றினால் முத்து முத்தாக விழும்...

  4. 4

    இந்த பூந்தி கொஞ்சம் சிவந்து வரும்.. காரணம் அதில் சர்க்கரை, பால் சேர்த்ததால்... திருப்பதி லட்டு கொஞ்சம் சிவந்த நிறமாக இருக்கும்... மஞ்சளாக இருக்காது...

  5. 5

    சிறிது சிறிதாக மாவை ஊற்றி பொரித்தெடுக்கவும்

  6. 6

    பொரித்தெடுத்த பூந்தியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்

  7. 7

    அத்துடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்

  8. 8

    அத்துடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்

  9. 9

    அத்துடன் பச்சை கற்பூரம் சேர்க்கவும்... இது தான் இதில் முக்கியமான பொருள்... அந்த லட்டுவின் மணத்திற்கு இது தான் காரணம்.. கையில் வைத்து தூள் செய்து சேர்த்து கொள்ளவும்... இல்லை என்றால் கரையாமல் இருக்கும்...

  10. 10

    அத்துடன் கற்கண்டு சேர்க்கவும்.. முந்திரி திராட்சை வறுத்தது போக மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்

  11. 11

    சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் பூந்தி கலவையில் ஊற்றி நன்கு கிளறி விடவும்..

  12. 12

    10, 15 நிமிடம் ஊறியதும் லட்டுவாக உருட்டவும்...

  13. 13

    இப்போது சுவையான லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes