இரானி டீ (Irani tea recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#ap

ஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி

இரானி டீ (Irani tea recipe in tamil)

#ap

ஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் தண்ணீர்
  2. 5ஏலக்காய்
  3. 2 ஸ்பூன் இஞ்சி துருவல்
  4. 3 ஸ்பூன் டீத்தூள்
  5. 4 ஸ்பூன் சர்க்கரை
  6. 1 கப் திக்கான பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தண்ணீர் எந்த கப்பில் அளக்கிறோமோ அதுலேயே பால் அளந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஐ ஊற்றி அதை ஒரு மஸ்லின் துணியால் மூடி பாத்திரத்தின் வாய் பகுதியை இறுக்கி கட்டவும் (துணி தண்ணீரில் மூழ்கும் படி இருக்க வேண்டும்)

  3. 3

    பின் அந்த துணி மேல் துருவிய இஞ்சி மற்றும் கரகரப்பாக இடித்த ஏலக்காய் போடவும்

  4. 4

    டீத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் பின் அதை குக்கரில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் ஒரு ஸ்டேண்ட் வைத்து அதன் மேல் இதை வைத்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கவும்

  5. 5

    ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து வெளியே எடுத்து துணியை அவிழ்த்து கொள்ளவும் சூப்பரான டிகாஷன் ரெடி

  6. 6

    பின் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் அதில் இந்த டிகாஷனை ஊற்றி மெல்லிய தீயில் 5_6 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்

  7. 7

    நல்ல நறுமணம் மற்றும் சூப்பரான ருசியில் இருக்கும் இந்த டீ

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Top Search in

Similar Recipes