திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#millets

சிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும்.

திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)

#millets

சிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/2 கப் திணை
  2. 3மேசைக்கரண்டி பாசிப்பருப்பு
  3. 11/2 கப் தண்ணீர்
  4. 1 கப் வெல்லம்
  5. 1/4 கப் தண்ணீர்
  6. 2மேசைக்கரண்டி நெய்
  7. 6முந்திரிப் பருப்பு
  8. 10கிஸ்மிஸ் பழம்
  9. 3 ஏலக்காய் பொடித்தது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தினணயைக் கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். காலையில் சமைப்பதாக இருந்தால் இரவே ஊற வைக்கலாம்.

  2. 2

    பாசிப்பருப்பை வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின்னர் இரண்டையும் ஒரு குக்கரில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  4. 4

    வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும்.

  5. 5

    கொதித்ததும் இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து வெல்லப் பாகை சேர்த்துக் கலந்து கிளறவும்.

  6. 6

    மறுபடியும் அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.

  7. 7

    நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes