கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்
#ownrecipe

கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்
#ownrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
10 பரிமாறுவது
  1. 11/2 கி பச்சரிசி
  2. 1/4 கி பாசிபருப்பு
  3. 11/2 வெல்லம்
  4. 5 ஏலக்காய்
  5. 50 கிஸ்மிஸ்,முந்திரி
  6. 100மில்லி நெய்
  7. 100 மில்லி பால்
  8. 1 inch சுக்கு
  9. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    முதலில் பச்சரி,பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி அந்தத் தண்ணீரை பொங்கல் வைக்கும் பானையில் ஊற்றிக் கொள்ள வேண்டும் பின் பால்ச் சேர்க்க வேண்டும் இதுவே நம் பாரம்பரியம் இதில் உள்ள தண்ணீரும் பாலும் பொங்கி கீழே ஊற்றும்

  2. 2

    ஊற்றியப்பின் நுரைகளையும் கீழே ஊற்றிக் கொள்ளவேண்டும் பின் அதிகமாக உள்ள தண்ணீரை அரிசிப்போடுவதற்காக குறைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    அரிசியும்,பருப்பும் வெந்து விட்டதா என்று அடிக்கடி பார்க்கவும் மற்றும் அடிக்கனமான பானை என்பதால் கீழிருந்து மேலாக அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொள்ளவும் பின் அரிசியும் பருப்பு வெந்ததும் தண்ணீரும் இஞ்சும்

  4. 4

    தண்ணீர் இஞ்சியதும் வெல்லத்தை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும்

  5. 5

    தட்டிய வெல்லத்தை சிறிது சிறுதாகச் சேர்க்கவும் கிண்டியப்படியே சேர்க்கவும் வெல்லம் உருகும் தன்மைக் கொண்டது எனில் மறுபடி தண்ணீர் பதம் கிடைக்கும் பின் ஏலக்காய்,சுக்கு இரண்டையும் தட்டிச் சேர்க்கவும்

  6. 6

    பிறகு அடுப்புத் தீயில் ஒருக்கரண்டியின் உதவியால் நெய் ஊற்றி சூடானதும் கிஸ்மிஸ்,முந்திரியை பொறித்துக் கொள்ளவும் பின் பொங்களுக்குள்ச் சேர்க்கவும் கடைசியாக நெய் முழுவதையும் ஊற்றி நன்றாக அடிப்பிடிக்காமல் பொங்களைக் கிண்டி இறக்கவும்

  7. 7

    கோவிலில் செய்யும் பாரம்பரியம் மிக்க சக்கரைப் பொங்கள் தயார் இலையில் பரிமாறி ருசிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes