பருத்திப்பால் (Paruthi paal recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#coconut பருத்திப்பால் குடிப்பதினால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பருத்திப்பால் (Paruthi paal recipe in tamil)

#coconut பருத்திப்பால் குடிப்பதினால் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேருக்கு
  1. 1 கைப்பிடி அளவு பருத்திக்கொட்டை
  2. 3 ஸ்பூன் பச்சரிசி மாவு
  3. 1 கைப்பிடி தேங்காய்துருவல் பால் எடுப்பதற்கு
  4. 1 கைப்பிடி அளவு வெல்லம்
  5. 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
  6. 1/4 ஸ்பூன் சுக்கு தூள்
  7. 1/4 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  8. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பருத்திக் கொட்டையை ஐந்து முறை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் மூன்று முறை பால் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கைப்பிடி தேங்காயை மூன்று முறை கெட்டியான பால் எடுக்கவும். முக்கால் டம்ளர் தேங்காய்ப்பால் வந்தது.

  3. 3

    மூன்று ஸ்பூன் அரிசி மாவில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும். பருத்திப்பால் ரோடு அரிசி மாவை சேர்த்து கொதிக்கவைக்கவும்.

  4. 4

    பின்பு ஏலக்காய்த் தூள் சுக்குத் தூள் மிளகுத் தூள் சேர்க்கவும். மூன்று நிமிடம் கொதிக்கவிடவும்.

  5. 5

    வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பருத்தி பாலோடு சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

  6. 6

    இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து பருகலாம். உடலுக்கு பலம் தரும் பருத்திப்பால் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes