முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

முருங்கைக் கீரைப்பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 2 கப்முருங்கைக்கீரை
  2. 1பெரிய வெங்காயம்
  3. 3வரமிளகாய்
  4. 3 ஸ்பூன்துவரம்பருப்பு
  5. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
  6. 2 ஸ்பூன்எண்ணெய்
  7. 1/4 ஸ்பூன்கடுகு
  8. 1/4 ஸ்பூன்உளுந்து

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக் கீரையை உருவி கழுவி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுந்து வரமிளகாய்,பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் தாளிக்கவும்.

  3. 3

    மற்றொரு அடுப்பில் துவரம்பருப்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதம் வேக விடவும்.

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.பிறகு கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையை வேக விடவும்

  5. 5

    கீரை நன்கு வெந்ததும், தண்ணீர் வற்றி சுருண்டு வந்ததும் வேக வைத்த துவரம் பருப்பு தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்

  6. 6

    சுவையான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes