பூரி உருளைக்கிழங்கு மசால்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

பூரி உருளைக்கிழங்கு மசால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு
  2. 1/4 கப் காய்ந்த பட்டாணி
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 பச்சை மிளகாய்
  6. ஒரு கொத்து கறிவேப்பிலை
  7. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1ஸ்பூன் கடுகு
  10. 1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  11. 1/2ஸ்பூன் சீரகம்
  12. 1டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  13. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    குக்கரில் உருளைக்கிழங்கு இரண்டாக நறுக்கி சேர்த்து பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து கிழங்குடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து நீளமாக வெங்காயம் நறுக்கியது கறிவேப்பிலைை, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.

  4. 4

    மசாலா கொதித்து பச்சை வாசனை போனதும் உப்பு சரிபார்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மசால் தயார்.நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes