சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ரவை சேர்த்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு அதை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் லேசாக எண்ணெய் தடவி வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்த பூரியை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.சுவையான பூரி தயார்.
- 4
குக்கரில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைத்து தோள் நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- 5
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சி சிறிதாக நறுக்கியது சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மசித்து வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சரிபார்க்கவும்.
- 7
ஒரு பவுலில் கடலை மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து இதில் ஊற்றி கலந்து விட்டு பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.
- 8
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். ஹோட்டல் சுவையில் பூரி உருளைக்கிழங்கு மசாலா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
ஆலு மசாலா பூரி
#cookwithfriends#deepskarthick#maincourse என் தோழி தீபிகாவிற்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் என் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உருளைக்கிழங்கு பொரியல் தான் விரும்பி சாப்பிடுவார். நண்பர்கள் தினத்தை முன்னிட்டு உருளைக்கிழங்கை வைத்து ஆலு மசாலா பூரி செய்துள்ளேன். இந்த ரெசிபி என் தோழிக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுக்கும். A Muthu Kangai -
-
-
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
-
-
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
-
-
தக்காளி மசாலா பூரி
#Everyday 3 .குழைந்தைகள் விரும்பி சாப்பிட வித்தியாசமான சுவையில் செய்து பார்த்தேன்.. மிக கலர்புல்லாகவும் சுவையாகவும் இருந்தது... உங்களுக்காக... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)