மோக்கா சிப் டார்ட்டே

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

மோக்கா சிப் டார்ட்டே

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
8 பேர்
  1. 3முட்டை- வெள்ளை கரு + மஞ்சள் கரு தனியாக வைக்கவும்
  2. 3 மேஜைக்கரண்டி நெச் காபி -
  3. 3 மேஜைக்கரண்டி வெந்நீர் -
  4. 1½ தேக்கரண்டியளவு ஜெலட்டின் -
  5. 1½ கப் விப்பிங் க்ரீம் -
  6. 2 கப் பால் -
  7. 2 கப் கன்டன்ச்ட் மில்க் -
  8. 75 கிராம் சாக்லட் துண்டுகள் -
  9. 75 கிராம்முந்திரி பருப்பு / பாதாம் பருப்பு -

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஜெலட்டின் ஓடு சிறிதளவு வெந்நீர் கலந்து வைக்கவும்.அதைபோல நெஸ் காபியுடனும் 3 மேஜைக்கரண்டி வெந்நீர் கலந்து வைக்கவும்.

  2. 2

    ஒர் அகன்ற பாத்திரத்தில் 3 முட்டை மஞ்சள் கருவுடன்,2 கப் பால் மற்றும் 2 கப் கன்டன்ச்ட் மில்க் சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும்.

  3. 3

    இத்துடன் கலந்து வைத்த ஜெலட்டின் மற்றும் காபி கலவையையும் சேர்க்கவும்.பின்பு இதை டபுள் பாய்ல் முறையில் நன்றாக காய்ச்சி அத்துடன் 50 கிராம் நறுக்கிய சாக்லேட் துண்டுகளை சேர்த்து கரைத்து, இக்கலவை சற்று கெட்டியானதும் சட்டியை விட்டு வெளியே எடுத்து நன்றாக ஆரவிடவும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் 3 முட்டை வெள்ளை கருவை
    நன்றாக அடித்து கொள்ள வும்.அது பார்க்க ☁️ மேகம் போல் இருக்கும்.

  5. 5

    மற்றொரு பாத்திரத்தில் 1½
    கப் விப்பிங் க்ரீம் எடுத்து அதை நன்றாக அடித்து கொள்ள வேண்டும்.

  6. 6

    நன்றாக அடித்து வைத்துள்ள முட்டையை மற்றும் விபிங் க்ரீமை ஒன்றன் பின் ஒன்றாக ஆரிய காபி முட்டை கலவையுடன் போல்டிங் முறையில் சேர்க்கவும். பின்பு இதை வேறொரு தட்டையான பாத்திரத்தில் மாற்றவும்.

  7. 7

    இதற்கு மேல் நறுக்கிய சாக்லேட் மற்றும் பாதாம் / முந்திரி பருப்பு துண்டுகளை தூவி க்ளிங் ரேப் போட்டு விட்டு,குளிர் சாதன பெட்டியில் 6 மணி நேரம் வைக்கவும்.பின்பு வெளியில் எடுத்து சிறிய துண்டாக வெட்டி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

கமெண்ட் (2)

Ackiyl Shihabdeen
Ackiyl Shihabdeen @cook_30679371
அருமையான ரெசிப்பி .விரிவான விலக்கத்துடன்.

Similar Recipes