சத்தான கோதுமை இடியாப்பம்

Sowmya
Sowmya @vishalakshi

#AsahiKaseiIndia
ஆவியில் வேக வைத்த மிகவும் சத்தான கோதுமை இடியாப்பம்

சத்தான கோதுமை இடியாப்பம்

#AsahiKaseiIndia
ஆவியில் வேக வைத்த மிகவும் சத்தான கோதுமை இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 250 கிராம் வறுத்து அரைத்த கோதுமை மாவு
  2. தேவையான அளவு உப்பு
  3. தேவையான அளவு தண்ணீர்
  4. 1/2 மூடி துருவிய தேங்காய்
  5. தேவையான அளவு சக்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 250 கிராம் வறுத்து அரைத்த கோதுமை மாவில்(முழு கோதுமையை‌ வறுத்து விட்டு பிறகு அரைத்த மாவு) தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    இடியாப்பம் செய்வதற்கு சுடு தண்ணீரை ஊற்றி தான் மாவு பிசைய வேண்டும் அதனால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனை சிறிது சிறிதாக மாவில் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்

  3. 3

    அடுத்து நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து இடியாப்ப கட்டையில் வைத்து நாம் இட்லி சட்டியில் இடியாப்பத்தை பிழிந்து கொள்ள வேண்டும்

  4. 4

    பிறகு இட்லி சட்டியை மூடி ஆவி வரும் வரை நன்றாக வேகவிட்டு அடுப்பை‌ அணைத்து விடலாம்

  5. 5

    இதோ மிகவும் சத்தான அதே சமயம் சுவையான கோதுமை இடியாப்பம் தயார் இதனுடன் நாம் கால் மூடி துருவிய தேங்காயை சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து சுவையானை இனிப்பு இடியாப்பம் ஆக உண்ணலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sowmya
Sowmya @vishalakshi
அன்று

கமெண்ட் (5)

Sowmya
Sowmya @vishalakshi
Nan godhumai maavil seidhu parthadhu ilai...mudhalil varuthu piragu araitha maavil dhan seidhen sis

Similar Recipes