பால் பணியாரம்

Sowmya
Sowmya @vishalakshi

பால் பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 200 கிராம் பச்சரிசி
  2. 200 கிராம் உளுந்து
  3. 1 முழு தேங்காய் (துருவியது)
  4. 200 கிராம் சக்கரை
  5. 1/2டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    200 கிராம் பச்சரிசி மற்றும் 200 கிராம் உளுந்தை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு 3 மணி நேரம் ஊற விட வேண்டும்

  2. 2

    3 மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்..அதிகம்‌ தண்ணீர் சேர்க்க‌ கூடாது..)

  3. 3

    அடுத்து தேங்காய் பால் செய்வதற்கு ஒரு முழு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்க வேண்டும் (வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து தேங்காயை அரைத்தால் பால் நன்றாக கிடைக்கும்)

  4. 4

    தேங்காயை அரைத்தவுடன் ஒரு வடிகட்டி வைத்து அதில் நாம் பாலை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

  5. 5

    அடுத்து தேங்காய் பாலில் அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 200 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்....தேங்காய் பால் தயார்..

  6. 6

    அடுத்து பணியாரம் சுடுவதற்கு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விட வேண்டும் பணியாரம் நன்றாக எண்ணெயில் மூழ்கி வேகும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்

  7. 7

    பணியாரம் நன்றாக வெந்ததும் அதனை ஒரு வடிதட்டில் எடுத்து வைக்க வேண்டும்

  8. 8

    அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்... தண்ணீரில் நாம் சுட்டு எடுத்து வைத்துள்ள பணியாரத்தை ஒரு முறை அலசி விட்டு எடுத்தால் பணியாரத்தில் உள்ள எண்ணெய் நீங்கி அது தேங்காய்ப்பாலுடன் சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும்

  9. 9

    ஒரு முறை தண்ணீரில் அலசி எடுத்த பிறகு பணியாரத்தின் மேல் நாம் அரைத்து வைத்துள்ள சுவையான தேங்காய்ப்பால் சேர்த்து ஊற விட வேண்டும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஊற விட வேண்டும் அப்பொழுதுதான் பணியாரம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்

  10. 10

    இதோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய மிகவும் ருசியான பால் பணியாரம் தயார் வாங்க சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes