கச்சாயம் / susiyam Recipe in tamil

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

கச்சாயம் / susiyam Recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1 கப் ரவா
  3. 1 கப் அரிசிமாவு
  4. 1 வாழைப்பழம்
  5. 2 கப்வெல்லம்
  6. 5 ஏலக்காய்
  7. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும் அதில் கோதுமை மாவு,ரவா, மைதா மாவு மூன்றையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு வாழைப் பழத்தையும் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லத்தைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இடிகல்லில் ஏலக்காய்களை போட்டு நன்கு இடித்து தூளாக்கிக் கொள்ளவும்.

  4. 4

    மாவில் வெல்லப்பாகை ஊற்றி ஒரு கரண்டியால் கிளறி விடவும். ஏலக்காய்த்தூளை போட்டு கெட்டி பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன குழிக்கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான கச்சாயம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes