புதினா பட்டாணி சாதம்(mint peas pulao recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

புதினா பட்டாணி சாதம்(mint peas pulao recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
மூன்று நபர்
  1. 1 ஆழாக்கு சீரக சம்பா அரிசி
  2. 1 கிண்ணம் பச்சைபட்டாணி
  3. 1பெரிய வெங்காயம்
  4. 3 பச்சை மிளகாய்
  5. 4பல் பூண்டு ஒரு கைப்பிடி புதினா இலை
  6. 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
  7. 4 ஸ்பூன்தாளிப்பதற்கு நெய்
  8. சிறிதளவுபட்டை கிராம்பு ஏலக்காய் மராட்டி மொக்கு
  9. தேவையானஅளவு உப்பு
  10. 6 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசியை இருமுறை கழுவி தேவையான நீர் விட்டு 20 நிமிடம்.ஊற விடவும். துருவிய தேங்காய், புதினா பச்சைமிளகாய், பூண்டு,இஞ்சி, மிக்சியில் நைசாக அரைக்கவும்.

  2. 2

    குக்கரில் 4 ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு சிறிதளவு சோம்பு, முந்திரி,நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். தேவையான உப்பு,ஊறவைத்த அரிசி சேர்த்து,அளவாக தண்ணீர் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு விசில் விடவும்.

  3. 3

    10 நிமிடம் ஆனதும் திறந்து மெதுவாக கிளறி விடவும் சுவையான புதினா பட்டாணி சாதம் தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes