பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# onepot

பீஸ் புலாவ் (Peas pulao recipe in tamil)

# onepot

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1/4 கட்டு கொத்தமல்லி புதினா
  2. 100 கிராம் பச்சைபட்டாணி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 400 கிராம் பாஸ்மதி அரிசி
  7. 1/2 டம்ளர் தேங்காய் பால்
  8. உப்பு தேவையான அளவு
  9. தாளிக்க
  10. 2பட்டை
  11. 1அன்னாசிப்பூ
  12. 4கிராம்பு
  13. 2பிரியாணி இலை
  14. 1 ஸ்பூன்
  15. 6 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை நீளவாக்கில் கட் பண்ணி வைக்கவும் கொத்தமல்லி புதினாவை நைசாக கட் பண்ணி வைக்கவும். தாளிக்க வேண்டியவற்றை தயாராக வைக்கவும்.

  2. 2

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.

  3. 3

    தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம்,ப.மி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, உப்பு சேர்க்கவும்.

  4. 4

    பிறகு புதினா கொத்தமல்லி சேர்த்து கிண்டி பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அரிசியை சேர்க்கவும்.

  5. 5

    நன்றாக கிளறி தேங்காய்ப்பால் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும். ஆறியதும் குக்கரை திறந்து முந்திரிப் பருப்பை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

  6. 6

    இதற்கு தொட்டுக்கொள்ள பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes