ரவா ஃபிர்னி(rava phirni recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

ரவா ஃபிர்னி(rava phirni recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 3/4 கப்ரவா -
  2. 1/2 லிட்டர்பால் -
  3. 1 கப்கன்டன்ஸ்ட் மில்க் -
  4. 3 கப்தண்ணீர் -
  5. 2 மேஜைக்கரண்டிநெய் -
  6. தலா 2 சிறிய துண்டகள்பட்டை, ரம்பை -
  7. 10 பருப்புபாதாம் பருப்பு -
  8. 2 ½ மேஜைக்கரண்டிசர்க்கரை -
  9. 1 சிட்டிகைஉப்பு -

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை ரம்பை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து வறுக்கவும். பின்பு அத்துடன் ரவை சேர்த்து வறுக்கவும் இத்துடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    சர்க்கரை நன்றாக கரைந்து, ரவையும் வெந்ததும் பால் சேர்த்து கொதிக்க விடவும் பின்பு கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்து சிறிது கெட்டியாகும் வரை கிளறவும் பின்பு அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

  3. 3

    அடுப்பை விட்டு இறக்கி விட்டு அதில் உள்ள பட்டை மற்றும் ரம்பை இலையை வெளியே எடுத்து விடவும். உப்பு 1 சிட்டிகை சேர்த்து கலக்கவும்.சூடு ஆறியதும் குளிர் சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்து பின்பு பரிமாறவும்.சுவையான ரவா ஃபிர்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes