கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

#HF
கேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1 கப் கேழ்வரகு மாவு
  2. 2 கப் தண்ணீர்
  3. 1 கப் சாதம் வடித்த கஞ்சி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 1 பச்சை மிளகாய்
  6. 1 துண்டு மாங்காய்
  7. கறிவேப்பிலை
  8. கொத்தமல்லி
  9. 1 கப் தயிர்
  10. கேரட்,இஞ்சி

சமையல் குறிப்புகள்

  1. 1

    1 கப் கேழ்வரகு மாவுடன் வடித்த தண்ணீர், உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

  2. 2

    காலையில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும் அதனுடன் புளிக்க வைத்த கேழ்வரகு மாவை சேர்த்து 15 நிமிடம் நன்குவேக வைக்கவும்.

  3. 3

    ஆறியதும் அதனுடன் தயிர் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,1கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கரைத்து பரிமாறவும்.

  4. 4

    மீதமான கேழ்வரகு மாவை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் உபயோகப்படுத்தலாம்.

  5. 5

    தேவை எனில் துருவிய கேரட் துருவிய இஞ்சி, மாங்காய் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

கமெண்ட் (4)

Similar Recipes