தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)

#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை.
தைப் பானைப் பொங்கல்/ பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#தமிழரின் பாரம்பரிய பண்டிகை தைப்பொங்கல். தமிழ்நாடு கலை கட்டும் தமிழர் திருவிழா. போகி தொடங்கி கரிநாள் வரை அனைத்து வீட்டிலும் உறவினர்கள் வருகையும் கேளிக்கை கொண்டாட்டமும் விருந்தும் உபசரிப்பும் கலைக்கட்டும் தமிழர் திருநாள். பானையில் பொங்கல் வைத்து கரும்பு மஞ்சள் கொம்பு வைத்து சூரியனுக்கும் மறுநாள் இதே போல் பொங்கல் செய்து மாடுகளுக்கும் பூஜை செய்வது உழவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக கொண்டாடப்படும் நாள். அடுத்த நாள் காலை அடக்கும் தமிழ் மறவர் திருநாள். இத்திருவிழா தமிழ்நாட்டிற்கு மட்டும் உரித்தான சிறப்பு பண்டிகை.
சமையல் குறிப்புகள்
- 1
பண்டிகைக்கு தேவையான இரண்டு நல்ல தரமான பானைகளை வாங்கிக் கொள்ளவும் தங்கள் வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு தகுந்தாற்போல் செய்யும் பொங்கல் அளவ ஏற்றார் போல் பானைகளை வாங்கிக் கொள்ளவும். எங்கள் வீட்டில் இருவர் மட்டும் என்பதால் நான் சிறியதாக பானை போல் அல்லாமல் கடைவதற்கும் குழம்பு வைப்பதற்கும் ஏற்றார் போல் பானை வாங்கினேன். பானைய தினமும் இரண்டு மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஊற்றி மறுநாள் வேரு தண்ணீர் மாற்றி வைக்கவும் பிறகு அரிசி கழுவிய தண்ணீர் சாதம் வடித்த கஞ்சி இப்படி ஒரு வாரம் வரை பச்சை மண்வாசம் போக பானையை
- 2
சுத்தம் செய்து கொள்ளவும். பொங்கல் என்று பானையை நன்கு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். அரிசியை கழுவ வேண்டாம். சுத்தம் செய்த பானையில் மூன்று டம்ளர் பாலை ஊற்றி பொங்க காய்ச்சவும்.பிறகு ஊறிய அரிசியை தண்ணீரில் சேர்த்து நிதானமாக கிளறி விடவும். பால் சுண்ட ஆரம்பிக்கும்போது அரிசி கழுவிய தண்ணீரை தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வேக விடவும்.
- 3
அரிசி பால் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரில் நன்கு குழைய வெந்த பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.தட்டு போட்டு மூடி வைக்கவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.கவனமாக பானை உடையாமல் கிளற வேண்டும். பிறகு பானைக்கு திருநீர் பட்டை சந்தன குங்குமம் வைத்து பூஜைக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும். சுவையான பால் பொங்கல் பூஜைக்கு தயார். இதற்கு கதம்ப காய் குழம்பு வைத்தேன் இதனுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
வெறும் பொங்கல் (பொங்க சோறு) மற்றும் சர்க்கரை பொங்கல்(pongal recipes in tamil)
#pongal 2022பொங்கல் பண்டிகைக்கு எங்கள் வீட்டில் இந்த முறை சக்கரை பொங்கல் மற்றும் வெறும் பொங்கல்.அதாவது பொங்க சோறு... Meena Ramesh -
குப்பிப் பொங்கல் இன்று (Kuppi pongal recipe in tamil)
பச்சரிசி மட்டும் பொங்கல் இடுவது .வெண்பொங்கல்.பச்சரிசி பாசிப்பருப்பு வெல்லம் கலந்து செய்வது சர்க்கரை ப்பொங்கல்.இதில் நெய் தேங்காய் கலந்து பின் நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் சேர்த்து கிண்டவும்.#பொங்கல் சிறப்பு ஒSubbulakshmi -
பொங்கல் குழம்பு (pongal kulambu recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் பண்டிகை அன்று எல்லா வகையான காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை சூரியனுக்குப் படைத்து பூஜை செய்வது வழக்கம். படைத்த காய்கறிகளளைக் கொண்டு பொங்கல் பண்டிகை அன்று அவியல், சாம்பார், பொரியல், கூட்டு, பச்சடி என்று சமைத்து மீதமுள்ளவற்றை மறுநாள் குழம்பு செய்வது வழக்கம். அந்தக் குழம்புக்கு பொங்கல் குழம்பு என்று பெயர். Natchiyar Sivasailam -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
-
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
காணும் பொங்கல் ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு (kootansooru recipe in tamil)
#பொங்கல் சிறப்பு ரெசிபிகள். Santhi Chowthri -
-
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
#GA4 #pooja சர்க்கரை பொங்கல் (Sakarai pongal recipe in tamil)
பொங்கல் அனைத்து நிகழ்வுகளுக்கும் வேகமான மற்றும் எளிதான உணவாகும் Christina Soosai -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
நவராத்திரி ஸ்பெசல் பால் சர்க்கரைப் பொங்கல் (Paal sarkarai pongal recipe in tamil)
பச்சரிசி ,பாசிப்பருப்பு, ஒருடம்ளர் தண்ணீர், பால் இரு டம்ளர் ,கலந்து வேகவிடவும். வெந்ததும்கால்கிலோவெல்லம் போட்டு கிண்டவும். நெய்50,வறுத்த முந்திரி, சாதிக்காய் தூள் ஒரு பிஞ்சு, ஏலம் போட்டு கலக்கி வைக்கவும். ஒSubbulakshmi -
சர்க்கரை சீனி பொங்கல் (Sarkarai seeni pongal recipe in tamil)
#poojaதொடர்ந்து பூஜைகள் வருவதால் நான் அடிக்கடி இனிப்பு போன்றவற்றை சேர்த்துக் கொள்கின்றோம் தொடர்ந்து சாப்பிடுவதால் குறைந்த அளவு நெய் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் நெய் சொட்ட சொட்ட உள்ளதுபோல் செய்வதற்கு ஒரு வழி இருக்கின்றது .நாம் சர்க்கரை பொங்கல் செய்யும் பொழுது எவ்வளவு வெள்ளம் எடுத்துக் கொள்கிறோமோ அதில் முக்கால் பாகம் வெல்லமும் கால்பாகம் சீனியும் சேர்த்து செய்ய வேண்டும்.சர்க்கரை பொங்கல் நாம் எப்பொழுதும் செய்வதுபோல் செய்துவிட்டு ஏலக்காய் ஜாதிக்காய் தேவையான அளவு சீனி சேர்த்து மிக்ஸியில் அரைத்து சர்க்கரை பொங்கல் இறக்குவதற்கு 5 நிமிடம் முன்னால் சேர்த்து கலந்தால் அதிக அளவு நெய் சேர்த்து செய்ததுபோல் சுவையாக இருக்கும் இந்த முறையில்தான் நான் ஆயுத பூஜையில் சர்க்கரை சீனி பொங்கல் செய்துள்ளேன் . Santhi Chowthri -
-
More Recipes
கமெண்ட் (3)