சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

#சட்னி மற்றும் டிப்ஸ்

சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது.

சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி

#சட்னி மற்றும் டிப்ஸ்

சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேருக்கு
  1. 10- மிளகாய் வத்தல்
  2. 5- சின்ன வெங்காயம்
  3. சிறு துண்டு - புளி
  4. தேவையான அளவு உப்பு
  5. 1மேசைக்கரண்டி - நல்லெண்ணெய்
  6. 1/4தேக்கரண்டி - கடுகு
  7. 1ஆர்க்கு - கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிளகாய் வத்தலைத் தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    மிளகாய் வத்தல் ஊறியதும் அதனுடன் சின்ன வெங்காயம், உப்பு, புளி சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    கடாயில் ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes